மியன்மாரின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் விமானப் பயணங்களுக்குப் பொறுப்பான அரச நிறுவனத்தின் பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு இராணுவத்தினர் ஆளும் கட்சியின் தலைவர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கைதுசெய்து, ஆட்சியைக் கைப்பற்றியரதத் தொடர்ந்தே, இந்நிலையேற்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யங்கூன் சர்வதேச விமான நிலையத்துக்கான பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பல டுவிட்டர் பதிவுகளிலும் மியன்மாரின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் இணைய சேவைகள் முடக்கப்படலாம் என்றும் அமெரிக்கத் தூதரகம் ‘பாதுகாப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.
மியன்மாரின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர், ஒரு வருட காலத்தில் மீண்டும் பொதுத் தேர்தலொன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.