
File Photo : twitter/WHO
கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் வூஹான் கடலுணவு சந்தைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் சென்றுள்ளனர்.
கொரோனா வைரசின் தோற்றுவாய் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சீனாவுக்கு சென்றுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் வூஹான் கடல் உணவு சந்தைக்குச் சென்றுள்ளனர்.
கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள கடலுணவு சந்தையில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஒரு மணித்தியாலம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
காய்கறிகள் கடல் உணவுகள் மாமிசங்கள் என தனித்தனி பிரிவுகளைக் கொண்டு எப்போதும் வுஹான் சந்தை மக்கள் கூட்டமாக காணப்பட்டது.
2019 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி சந்தையுடன் தொடர்பு பட்ட நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தை மூடப்பட்டது.
அன்று முதல் தற்போது வரை குறித்த சந்தை மூடப்பட்டு காணப்படுவதுடன் பெரும் அதிர்ச்சியை சந்தித்த நகரத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
முதலாவது கொத்தணி இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் குறித்த விசாரணைகளுக்கு வூஹான் சந்தையே இன்னமும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.