ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
102 நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ருமேனியாவின் மட்டேய் பல்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு அறைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
மூவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாவது நபரின் சடலத்தை பின்னர் கழிவறையிலிருந்து மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ருமேனிய தலைநகரில் உள்ள முக்கியமான அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு ஒக்சிசன் பயன்படுத்தும் நிலையிலிருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ருமேனியாவில் மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது தீ விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ருமேனியாவில் 7700 கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.