January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’76 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றவற்றை உலகம் மறக்காமலிருப்பது அவசியம்’

ஹிட்லரின் ஆஸ்விட்ஸ் சித்திரவதை முகாம் விடுவிக்கப்பட்டு இன்றுடன் 76 வருடங்கள் பூர்த்தியாவதை குறிக்குமுகமாக கருத்து வெளியிட்டுள்ள பாப்பரசர் புதிய தேசியவாதம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

76 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றவற்றை உலகம் மறக்காமலிருப்பது அவசியம் என பாப்பரசர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மிருகத்தனத்தின் தோற்றத்தை மீண்டும் ஒருபோதும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

76 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்கள் போல மீண்டும் இடம்பெறலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்தவற்றை நினைவில் கொள்வது மனித குலத்தின் வெளிப்பாடு மற்றும் நாகரீகத்தின் அடையாளம் எனவும் நினைவில் கொள்வது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு நிபந்தனை எனவும் பாப்பரசர் கூறியுள்ளார்.

தேசியவாதத்தின் ஆபத்துக்களுக்கு எதிராக சமூகம் தனது எச்சரிக்கையை சிறிதளவும் தளர்த்தக்கூடாது எனவும் பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியவாதமானது மக்களை பாதுகாப்பது என்ற கொள்கைகளுடன் ஆரம்பித்து மக்களையும் மனித குலத்தையும் அழிப்பதுடன் முடிவடையலாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.