January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த காலப்பகுதியில் ஜனநாயகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்’

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த காலப்பகுதியில் ஜனநாயகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக தலைவர்கள் கருதுவதாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உருசுலா வொன்டெயர் லெயன் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் மெய்நிகர் டாவோஸ் நிகழ்ச்சி நிரலில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு வருடகாலத்திற்கு முன்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தவறிழைத்த கார் உற்பத்தியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா வரிகளை விதிக்குமா என்பது குறித்து அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போது கடந்த நான்கு வருடங்களில் ஜனநாயகமே பாதிக்கப்பட்டிருக்கலாம் என தாம் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் உலகத்தின் இருண்ட பக்கங்களிற்கும் தீர்வை காணவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை போன்ற பலரிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் இடம்பெற்ற வன்முறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தாம் எப்போதும் ஜனநாயகமும் விழுமியங்களும் தமது மரபணுக்களின் ஒரு பகுதி என தெரிவிப்பது வழமை அது உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தாம் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டும், அழிக்கும் சக்தி கொண்ட குரோதப்பேச்சு தவறான தகவல் போலி செய்திகள் மற்றும் வன்முறைக்கு தூண்டுதல் ஆகியவற்றிற்கு எதிராகவும் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் சுதந்திரமான நியாயமான போட்டிக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எங்கள் பாதுகாப்பு எங்கள் ஜனநாயகம் எங்கள் தகவல்கள் ஆகியவற்றின் தரம் ஆகியவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றுள்ளார்.

இதன் காரணமாகவே தாம் பாரிய டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.