January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளை மாளிகைக்கு நஞ்சு அனுப்பிய விவகாரம்: கனேடிய பெண் கைது!

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு ரைசின் என்ற நச்சுப் பொருள் அடங்கிய பொதி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பில் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்ட இந்தப் பெண்ணிடம் துப்பாக்கியும் இருந்ததாக அமெரிக்க குடிவரவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவிலிருந்து வந்ததாக நம்பப்படும் குறித்த பொதி வெள்ளை மாளிகைக்கு செல்ல முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.ஒருவகை தாவரத்தின் விதையிலிருந்து எடுக்கப்படும் ரைசின் நச்சுப் பொருளை ஒருவர் உட்கொண்டாலோ சுவாசித்தாலோ 36 முதல் 72 மணி நேரத்துக்குக்குள் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-இன் அதிகாரிகளிடமிருந்து இந்த விவகாரம் தொடர்பில் கருத்து எதுவும் வெளியாகவில்லை.இதனிடையே, சந்தேகநபரான பெண் கைதான தகவலைத் தொடர்ந்து கனடாவின் மொன்ரியோலின் புறநகர் பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய பொலிசின் இரசாயன-உயிரியல் கதிரியக்க வெடிபொருள் நிபுணர்கள் குழுவொன்று இந்த விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.