January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்குத் தயார்: இரான் அறிவிப்பு!

அமெரிக்காவுடன் முழுமையான கைதிகள் பரிமாற்றத்திற்குத் தயார் என இரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற வெளியுறவுகள் தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் இணையம் மூலம் கலந்துகொண்ட போதே இரானின் வெளியுறவு அமைச்சர் ஜாவட் சரிஃப் இதனை தெரிவித்துள்ளார். இரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கவுள்ள நிலையிலேயே அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் இந்தக் கருத்து வந்துள்ளது.,

தங்கள் நாட்டு பிரஜைகளை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா நீண்டகாலமாக கேட்டுவருகின்றது. இரானில் சிறைவைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிரஜைகளில் இரானிய-அமெரிக்க தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் உள்ளனர்.

இரான் சிறைவைத்துள்ள பல வெளிநாட்டவர்கள் மீது – உளவுக் குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது.