November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் தடைகளை அமெரிக்கா நீக்கவேண்டும்’

ஈரானின் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் தடைகளை நீக்குமாறு ஈரான் அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டில் பயன்படுத்துவதற்காக ஸ்புட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

முன்னைய அரசாங்கத்தை போல பைடன் அரசாங்கம் விஞ்ஞானத்திற்கு எதிரானதில்லை என தெரிவிப்பதால் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறந்த உணவுகளை, மருந்துகளை பெறுவதற்கு தடையாக உள்ள வெளிநாட்டு நாணய தடையை பைடன் நிர்வாகம் அகற்றவேண்டும் என ஈரான் அரசாங்க பேச்சாளர் அலிரபேயி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தடைகளை நீக்காவிட்டால் ஐ.நா.வின் அணுவாயுத கண்காணிப்பு அமைப்பு ஈரானின் அணு உலைகளை சோதனையிடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் அஸ்டிராஜெனேகாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் காசிம் ஜன்பாபாயேய் தெரிவித்துள்ளார்.