File Photo : Twitter /@klsbower
சீனாவின் தங்கச் சுரங்கத்தில் சிக்குண்ட தொழிலாளர்களில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேரின் உடல்களையும் மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
சன்டொங் மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த 10 ஆம் திகதி வெடி விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தின் போது சுரங்கத்தின் நுழைவாயில் திடீரென மூடிக்கொண்டதை தொடர்ந்து 22 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்குண்டிருந்தனர்.
இந்நிலையில், மீட்புப்பணியாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை, 11 தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். அத்துடன் படுகாயமடைந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந் நிலையிலேயே மேலும் 9 பேரின் உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
யன்டாய் நகரின் மேயர் இதனை உறுதி செய்துள்ளதுடன் விபத்தில் காணமால் போயுள்ள மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.