January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் நால்வர் பலி!

சிரியாவின் ஹமா பகுதியை இலக்குவைத்து இஸ்ரேலிய விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.

எனினும் பல ஏவுகணைகளை தமது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைகள் சுட்டுவீழ்த்தியுள்ளன என சிரியா குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை நான்கு மணிக்கு இஸ்ரேலிய விமானங்கள் வான் வெளி அத்துமீறலில் ஈடுபட்டன என தெரிவித்துள்ள இஸ்ரேலின் சனா செய்தி சேவை லெபனானின் திரிபோலி நகரத்தின் பக்கமாகயிருந்து சிரியாவின் ஹமாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சனா செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.