July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூயோர்க் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று படைவீரர்கள் பலி

நியூயோர்க் தேசிய பாதுகாப்புப் படையினரின் பயிற்சி விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் மூன்று படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு நியூயோர்க் ரொச்செஸ்டர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமையான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த யூஎச்-30 ரக ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராணுவ விமான ஆதரவு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணிச்சலான மூன்று படைவீரர்களின் இழப்பு மிகுந்த வருத்தத்தைத் தருவதாகவும், மாநில கட்டடங்களில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் நியூயோர்க் ஆளுநர் அன்ட்ரு கியுமோ தெரிவித்துள்ளார்.