January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்பெயின் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம்! மீட்புப் பணிகள் தீவிரம்

ஸ்பெயின் (Spain) நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகரின் டோலிடோ வீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான முதியோர் காப்பகம் ஒன்றின் அடுக்குமாடி தொடரில் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் கட்டிடத்தின் மூன்று மாடிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு காரணமாக ஏற்பட்ட இடிபாடுகள் டோலிடோ வீதி முழுவதும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடத்தின் ஏனைய பகுதிகளில் இருக்கும் பாதிரியார்கள் மற்றும் முதியவர்கள்  பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னார்வலர் ஒருவரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

 

மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எரிவாயு சிலிண்டர்வெடித்ததன் காரணமாக இவ் வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள கட்டிடத்துக்கு அருகில் பாடசாலை ஒன்று அமைந்துள்ளதாகவும் அதில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.