November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் பதவிக்கு வந்த முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் விளங்குகின்றார்.

இவர் இன்று அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

56 வயதான கமலா தேவி ஹாரிஸ் இந்திய- ஜெமேக்க களப்பு வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

தொழில்சார் சட்டத்தரணியான அவர், 2017 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கலிபோர்னியா மாநிலத்துக்கதன தலைமை நீதிபதியாகவும் கமலா செயற்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனும் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்சையும் தோற்கடித்து, துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.