
(Photo:Antony Blinken/ Facebook)
சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளால் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப போவதாக அமெரிக்கவின் புதிய இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனால் புதிய இராஜாங்க செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆண்டனி பிளிங்கன் வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கடந்த சில வருடகால அனுபவங்களை அடிப்படையாக வைத்து எங்களின் சகாக்கள் சிலர் எங்களின் அர்ப்பணிப்புகளின் நீடித்த பேண்தகமையை கேள்விக்குள்ளாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது அதேவேளை நாட்டில் உள்ளவர்களுக்கும் அதனால் நன்மை கிடைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கும், தலைமைத்துவத்திற்கும் அமெரிக்க மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எங்களது முக்கிய கூட்டணிகளை நாம் புத்துயிர் பெறச் செய்யலாம், சீனா,ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா முன்வைக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் நாங்கள் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறோம் எனவும் இராஜாங்க செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.