
File Photo : asrc.org.au
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அகதிகளும் இந்த வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படலாம் என அகதிகளுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கார்ல்டனில் உள்ள பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 ஆண்கள் புதன்கிழமை சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டதாகவும், ஏனைய 34 பேரும் வியாழக்கிழமை வெளியேறப்படுவார்கள் என்றும் தஞ்சம் கோருவோர் வள மையம் (The Asylum Seeker Resource Centre) தெரிவித்துள்ளது.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மெடேவாக் சட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைகளுக்காக மனஸ்தீவிலிருந்தும் நவ்ரூவிலிருந்தும் 2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் 64 அகதிகள் மெல்பேர்ன் ஹோட்டல் அறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.