January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ள அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி காலை 8.30 காங்கிரஸ் கட்டடத்தின் மேற்கு முன்றலில் பதவியேற்பு வைபவம் ஆரம்பமாகவுள்ளதோடு, நன்பகல் 12 மணியளவில் பைடன், கமலா ஆகியோர் பதவியேற்கவுள்ளனர்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, பில் கிலின்டன் மற்றும் ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் பதவிக் காலம் முடிவடையும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிலவும் கொரோனா அவதானம் காரணமாக பதவியேற்பு நிகழ்வின் அதிதிகள் தொகை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, 25 ஆயிரம் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.