ஜப்பானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளதை தொடர்ந்து பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை ஜப்பானில் 4900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கடந்த ஆறு வார காலப்பகுதியில் ஜப்பானில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,38,000 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4700 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியமிக்க கொரோனாவும் தீவிரமாக பரவத்தொடங்கியுள்ளது என ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆபத்தான நிலையை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சுகாதார சேவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசியமான சேவையை வழங்குவதே முக்கியம் என குறிப்பிட்டுள்ள பிரதமர், மருத்துவ துறையை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு இராணுவ மருத்துவ குழுக்களை அனுப்புவதற்கு அரசாங்கம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.