File Photo: pelosi.house.gov/ Nancy Pelosi
அமெரிக்கா, காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் மடிக்கணினியை பெண்ணொருவர் எடுத்து ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கலாம் என FBI (அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை) தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றவேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த பெண்ணுக்கு எதிராகத் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் போது FBI அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எனினும் நான்சி பெலோசியின் அலுவலகத்திலிருந்து மடிக்கணினி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள FBI இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகத் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பெண்ணின் பெயர் வில்லியம்ஸ் எனவும் FBI தெரிவித்துள்ளது.
வில்லியமஸ், என்பவர் பாராளுமன்றத்திற்குள் காணப்படுவதையும் நான்சி பெலோசியின் அலுவலகத்திற்குள் செல்லுமாறு அவர் கலகக்காரர்களைத் தூண்டுவதையும் FBI யின் காணொளிப் பதிவொன்று காண்பித்துள்ளது.
அத்துடன் குறித்த பதிவில் வில்லியம்ஸ் மடிக்கணினியொன்றை எடுக்க முயல்வதைக் காணமுடிவதாக FBI தெரிவித்துள்ளது.
வில்லியம்ஸ் அந்த கணினியை ரஷ்யாவின் புலனாய்வு பிரிவினருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் FBI தகவல் வெளியிட்டுள்ளது.