November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்று உறுதி!

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட சீனாவின் தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களின் மூன்று மாதிரிகளில்  இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனுடன்  4,836 ஐஸ்கிரீம் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் 1,812 ஐஸ்கிரீம் பெட்டிகள் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவ் ஐஸ்கிரீம்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலையில் 1,662 ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 700 பேரின் முடிவுகள் வெளியாகியுள்ள போதிலும் அவர்களுக்குத் தொற்று உறுதியாகவில்லை.

நியூசிலாந்து நிறுவனம் ஒன்றிலிருந்து இவ் தொழிற்சாலைக்குப் பால் உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

எனினும் குளிர் நிலைமைகளில் வைரஸ் உயிருடன் இருக்கும் சாத்தியம் இருப்பதால் இது தொழிற்சாலையில் உள்ள சுகாதார குறைபாடு காரணமாக மனிதர்களிடமிருந்து பரவியிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.