அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது உட்பட முக்கியமான ஆவணங்களில் ஜோ பைடன் கைச்சாத்திடவுள்ளார்.
முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் விதித்த பயண தடையை நீக்கவும், முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்தவர்களை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்யவும் பைடன் ஆணையிடவுள்ளார்.
அமெரிக்க மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவிலும் பைடன் கைச்சாத்திடவுள்ளார்.
பருவநிலை மாற்றம், வெளிவிவகாரக் கொள்கை, குடியேறிகள் உட்பட பல விவகாரங்களில் முக்கியமான கொள்கை முடிவுகளை தான் பதவியேற்கும் தினத்தில் அறிவிக்கப்போவதாக பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.