பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினை பயன்படுத்தியவர்கள் நோர்வேயில் உயிரிழந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலியா ஆராயும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கிரெய்க் ஹன்ட், எனினும் 30 பேர் வரை மரணமடைந்தமைக்கு அவரது மூப்பு காரணமா என்பது இன்னமும் உறுதியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அவுஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பே முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,நோர்வேயிலிருந்து கிடைக்கும் தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொள்வதாக அவுஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நோர்வேயில் ஏற்பட்ட மரணங்களிற்கு மூப்பு காரணமா என்பது தெரியவில்லை.அல்லது மருந்துதான் காரணமா என்பதும் உறுதியாகவில்லை.நாங்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் எங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.இதன் காரணமாக நாங்கள் வகுத்துள்ள கால எல்லைகள் குறித்து எந்த மாற்றமுமில்லை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர், அவுஸ்திரேலியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு என்ன முடிவையும் எடுக்ககூடிய விதத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.