February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

அமெரிக்காவில் 50 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக ஆயுதங்கள் ஏந்தியவர்கள் ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறைகளில் ஈடுபடலாம் என  மத்திய புலனாய்வுத்துறை (FBI) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் வொஷிங்டன் உட்பட முக்கிய நகரங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் எந்தவித தடையுமின்றி பதவியேற்க வழிவகை செய்யும் வகையில், அவரது வெற்றியை ஆதரித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டதுடன்  இதில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது மீண்டும் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களினதும் ஆளுநர்கள் தமது மாநிலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.