வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பேணுவது தொடர்பான புதிய கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் காலத்தை பிற்போடத் தீர்மானித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதிய கொள்கைகள் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வர இருந்தபோதும், குறித்த விடயத்தை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை பிற்போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கைகள் தொடர்பாக பயனாளிகளிடம் தவறான கருத்துக்ககள் பகிரப்பட்டுள்ளதாகவும், பயனாளர்களை தெளிவுபடுத்தவேண்டிய தேவை இருப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதாகவும், புதிய கொள்கைகளில் பயனாளர்களின் தகவல்கள் குறித்த இரகசியத்தன்மைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கொள்கைகள் காரணமாக 500 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற வேறு வலைத்தளங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.