கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப வெளிப்பாட்டை ஆராயும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக் குழுவொன்று சீனாவின் வூஹான் நகரத்தை வந்தடைந்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக் குழு சீனாவுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறுபட்ட பேச்சவார்த்தைகளைத் தொடர்ந்தே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 10 விஞ்ஞானிகளைக் கொண்ட ஆய்வுக் குழு, சீனாவின் வூஹான் பகுதியில் ஆய்வுப் பணிகளை இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் முதன்முதலாக வெளிப்பட்டதாகக் கூறப்படும் வூஹான் பிரதேச மக்களுடன் நேர்காணல்கள் மேற்கொள்ளவுள்ள இந்த ஆய்வுக் குழு, விற்பனை நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு நிலையங்களையும் ஆய்வு செய்யவுள்ளது.