November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மலேசியாவில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சுல்தான் அப்துல்லா அஹமட் சா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் முகைதீன் யாசீன் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவசரகாலநிலை குறித்த அறிவிப்பில் மன்னர் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மலேசியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான கடும் நடவடிக்கைகளை பிரதமர் அறிவித்ததன் தொடர்சியாகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தினது நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.

பிரதமரின் பத்துமாத கால அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சகாக்கள் விலகப்போவதாக எச்சரித்துள்ளனர்.

இவ்வாறாக இது ஸ்திரமற்ற நிலையில் உள்ள அரசாங்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.