File Photo : wikipedia/ WilliamJosephBurns
அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான, சி.ஐ.ஏ யின் புதிய இயக்குநராக அனுபவமிக்க அந்நாட்டு மூத்த சிரேஷ்ட இராஜதந்திரியான வில்லியம் பேர்ன்ஸை, ஜோ பைடன் நியமிக்கவுள்ளார்.
இவர் நியமிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என பைடன் தெரிவித்துள்ளார்.
வில்லியம் பேர்ன்ஸ், ரீகன் நிர்வாகம் முதல் ஒபாமா நிர்வாகம் வரை இராஜதந்திரியாக பணியாற்றிய அனுபவமிக்கவர்.
வில்லியம் பேர்ன்ஸின் நியமனம் உறுதி செய்யப்பட்டால் இராஜாங்க திணைக்களம் குறித்த பழுத்த அனுபவமிக்க ஒருவர் சி.ஐ.ஏ யின் இயக்குநர் பதவியை வகிக்கும் முதல் சந்தர்ப்பமாக இதுவாக அமையும்.
அனுபவம் மற்றும் டிரம்பிற்கு பிந்தைய யுகத்தில் சி.ஐ.ஏ யின் நம்பகத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தக் கூடிய அவரின் திறமையின் காரணமாக அவரை தெரிவு செய்ததாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உளவுத்துறை அரசியல் மயப்படுத்தப்படாததாக காணப்பட வேண்டும் என்பதுடன் அதனைச் சேர்ந்தவர்கள் எங்கள் நன்றியுணர்விற்கு உரியவர்கள் என்ற தனது ஆழ்ந்த நம்பிக்கையை வில்லியம் பேர்ன்ஸ் கொண்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.