pic: @DialoguePak/ Twitter
பாகிஸ்தானில் நாடளாவிய ரீதியில் திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நாடு முழுவதும் இருளில் மூழ்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சில மணிநேரத்தின் பின் சிலநகரங்களிற்கு மீண்டும் மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தானின் எரிசக்தித் துறை அமைச்சர் ஒமார் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
மின் துண்டிப்பு காரணமாகத் தலைநகர் உட்பட பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மின் துண்டிப்பு புதிய விடயமல்ல என்ற போதிலும் நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மின் கட்டமைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Massive power outage plunges Pakistan into darkness https://t.co/qtbE0A7qOk pic.twitter.com/tX2ZuJ1UGA
— Anadolu English (@anadoluagency) January 10, 2021