January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

50 க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானத்தைக் காணவில்லை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானமொன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சிறிவிஜய போயிங் 737 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்கு காளிமாண்டான் மாகாணத்தில் உள்ள பொன்டியானாக் என்ற இடத்துக்கு செல்லும் வழியிலேயே இந்த போயிங் 737 விமானம் தொடர்புகளை இழந்துள்ளது.

விமானம் 3000 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் போதே, தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜகார்த்தாவிற்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் விமானமொன்றின் சிதைவுகள் போன்றவொன்றை பார்த்ததாக அப்பகுதி மீனவர்கள் இந்தோனேசிய தொலைக்காட்சியொன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதுடன் இந்தோனோசியாவின் பல தொலைக்காட்சி ஊடகங்களில் விமானத்தின் சிதைவுகளை காண்பித்து வருகின்றன.