டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அரசமைப்பின் 25 வது திருத்தத்தினை பயன்படுத்தி டொனால்ட் டிரம்பினை பதவி விலக்குவதற்கான நடவடிக்கைகளை துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் எடுக்காவிட்டால் டிரம்பிற்கு எதிராக உடனடியாக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணைய கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இறங்கியுள்ளார் என ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டொனால்ட் டிரம்பினை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு செனெட்டின் இரு கட்சியினதும் ஆதரவு அவசியம் என தெரிவித்துள்ள சிஎன்என், ஜனநாயக கட்சியிடம் இந்த பலம் இல்லாத போதிலும் டிரம்பின் தேசத்துரோக நடவடிக்கைகளிற்காக சனப்பிரதிநிதிகள் சபை டிரம்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என தெரிவித்துள்ளார்.
இது மிகவும் அவசரமான- மிக உயர்ந்த அளவிலான அவசரநிலை என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு எதிராக வேகமான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையொன்றை கொண்டுவந்து வாக்கெடுப்பை நடத்துவதா என்பது குறித்து பெலோசியும் அவரது குழுவினரும் வியாழக்கிழமை இரவு ஆராய்ந்துள்ளனர்.
இது குறித்து பொதுவான கருத்துடன்பாடு காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுளளன.
டிரம்பினை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என்ற பொதுவான கருத்துடன்பாடு காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.