அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டு நாடாளுமன்றமான காங்கிரஸ் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் காங்கிரஸ் கூட்டு- அமர்வின் போதே, காங்கிரஸ் கட்டடத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வேர்மொன்ட் மாநிலத்தின் மூன்று வாக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டதன் மூலம் ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் வெற்றிக்குத் தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகள் கிடைத்துவிட்டதாக காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
காங்கிரஸின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் இம்மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளனர்.
இதனிடையே, ‘ஒழுங்குமுறையான ஆட்சிமாற்றத்தை’ உறுதிசெய்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.