file photo: Facebook/ Joe Biden
அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக காங்கிரஸின் மேலவையான செனட்டின் அதிகாரத்தை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டதன் மூலம், காங்கிரஸின் இரு அவைகளும் ஜனநாயகக் கட்சியின் வசம் வந்துள்ளன.
இதன்மூலம் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தின் சட்டங்களையும் திட்டங்களையும் இடையூறு இன்றி நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜோர்ஜியாவில் நடந்துமுடிந்த இரண்டு செனட் உறுப்பினர்களுக்கான மறு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் செனட் சபையில் – குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் பலம் 50-50 என்ற அளவிற்கு சமநிலைக்கு வந்துள்ளது.
புதிய துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ‘டை பிரேக்கர்’ எனப்படும் இறுதி முடிவுக்கான வாக்கை அளிக்கும் அந்தஸ்தில் இருப்பதால் பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.