சீனாவின், பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 75 மில்லியன் சனத்தொகையை கொண்ட பீஜிங்கில், புதிய வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ‘மிகவும் கடினமான பணியை’ எதிர்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை, ஹெபியில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் 43 பேருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து இன்று புதன்கிழமை முதல், பீஜிங் மாகாணத்தில் ஒன்றுகூடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.