July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜூலியன் அசாஞ்சை பிணையில் விடுதலை செய்ய லண்டன் நீதிமன்றம் மறுப்பு

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை பிணையில் விடுதலை செய்ய லண்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜூலியன் அசாஞ்சை பிணையில் விடுதலை செய்தால், அவர் தலைமறைவாகி விடுவார் என்ற அச்சம் காரணமாக லண்டன் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு லண்டன் நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்தே, பிணையில் செல்வதற்கான மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எனினும், அவரது பிணை மனுவை நிராகரித்துள்ள நீதிபதி வனேசா பரைட்செர், அசாஞ்சை பிணையில் விடுதலை செய்தால், அவர் நீதிமன்றத்தில் சரணடையவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவோ மாட்டார் எனக் கருதுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இந்த வழக்கில் வெற்றிபெறவில்லை என்றும் மேன்முறையீட்டின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜூலியன் அசாஞ்சை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.