இந்தியக் குடியரசு தின நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்தியா செல்லவிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போரிஸ் ஜோன்சன் தனது பயணத்தை கைவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட போரிஸ் ஜோன்சன், திட்டமிட்டபடி தன்னால் இந்தியாவிற்கு வரமுடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, திங்கட்கிழமை முதல் இங்கிலாந்திலும் ஸ்கொட்லாந்திலும் கடுமையான முடக்கல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையிலேயே போரிஸ் ஜோன்சன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய முடக்கல் நிலை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.