November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு மெக்சிக்கோவில் அங்கீகாரம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் 1 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள மெக்சிக்கோ, அவசரகாலப் பயன்பாட்டிற்காக இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘கொவிஷீல்ட்’ எனப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு மெக்சிக்கோவின் மருத்துவத்துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நாட்டு சுகாதார ஊழியர்களுக்கு தற்போது முன்னுரிமை அடிப்படையில், பைசர்-பயோன்டெக் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘கொவிஷீல்ட்’ எனப்படும் இரண்டாவது தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் குறித்த ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசியினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந் நாட்டின் துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.