January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், அதனை சுற்றியுள்ள 3 மாகாணங்களிலும் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரையில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3, 548 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், வைரஸ் தொற்றைத் கட்டுப்படுத்தும் பொருட்டு, டோக்கியோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் அவசர கால  நிலையை ஜப்பானின் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய பல நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.