January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டொனால்ட் டிரம்ப் ஈரானிற்கு எதிராக கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்கலாம்’

டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் ஈரானிற்கு எதிரான கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டு ஒரு வருடமாகின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானங்கள் வளைகுடாமீது கடந்த மாதம் மூன்று தடவைகள் தென்பட்டன.சொலைமானி கொலை செய்யப்பட்டு ஒரு வருடமாகின்ற நிலையில் ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்காகவே விமானங்களை அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் டிரம்பின் பதவிக்காலம் இன்னமும் சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், ஈரானிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்காவின் சகாக்களான இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் வற்புறுத்துகின்றன என நோர்த்வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நிலையத்தை சேர்ந்த டானி பொஸ்டெல் அல்- ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

ஒரு இறுதி விளையாட்டு சூழ்நிலையில் டிரம்ப் காயம்பட்ட சுற்றிவளைக்கப்பட்ட விலங்கு என தெரிவித்துள்ள பொஸ்டெல், அவருக்கு இன்னமும் சில வாரங்களே உள்ளன. அவர் மிகவும் ஒழுங்கற்ற விதத்தில் நடந்துகொள்ளக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மிகவும் ஒழுங்கற்ற,பொறுப்பற்ற நடவடிக்கை இனிமேல்தான் இடம்பெறவுள்ளது என கருதலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.