அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் பிலிப்பைன்ஸ் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை, உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டன் உட்பட 10 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் பயணத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் இதுவரை இலட்சத்தி 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்க்கு உள்ளாகியுள்ளதோடு, 9,248 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.