சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த 14 ஆம் திகதி பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவருக்கே இவ்வாறு புதியவகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிக வீரியத்துடன் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடிய புதியவகை கொரோனா வைரஸ் பிரிட்டனிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பல நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்திக்கொண்டுள்ளன.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது புதிய வடிவம் பெற்று கனடா, ஜப்பான், லெபனான்,டென்மார்க், ஸ்வீடன், நைஜீரியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.