யெமனின் ஏடன் விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கும் போது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று யெமன் ஏடன் விமான நிலையம் மீதான கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபிய ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் விமானத்தில் வந்து தரையிறங்கும் போதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஹெளதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சவுதி அரேபியா தலைமையிலான நாடுகள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை யெமன் தலைநகரில் உள்ள ஹெளதி போராளிகளின் நிலைகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளன.
யெமன் தலைநகரின் 15 இடங்களில் வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமன் தலைநகர் சனா விமான நிலையம் உட்பட கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சவுதி அரேபியா தலைமையிலான படையணி நடத்திய விமான தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
New footage of the missile attack on #adenairport yesterday.#Aden #Yemen pic.twitter.com/y9YxCsa0aI
— Ali Al-Sakani | علي السكني (@Alsakaniali) December 30, 2020