கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் மருத்துவ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அந்நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் சுகாதார பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், அந்நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் இறுதிக் கட்ட முடிவில் 79 சதவீத செயல்திறனைக் கொண்டது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றதாகவும் சினோபார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் 50 மில்லியன் சீனர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இதேவேளை, சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த சினோபார்ம் கொரோனா தடுப்பூசி, அவசர திட்டமொன்றின் கீழ் சீனாவில் 10 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.