கொரோனா வைரஸூக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனேகா மருத்துவ ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பிரிட்டனில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் சுகாதார செயலாளர் மேட் ஹேன்கொக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதாகவும், புது வருடத்தின் முதல் சில வாரங்களிலேயே தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் 100 மில்லியன் அஸ்டிராஜெனேகா தடுப்பூசிகளைப் பெற்று, 50 மில்லியன் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பைசர் தடுப்பூசி பயன்பாட்டிற்கும் இம்மாதம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.