Photo:IFRC_Europe_twitter
குரோஸியாவின் மத்திய பகுதியை தாக்கிய பூகம்பம் பூகமபம் காரணமாக குழந்தையொன்று பலியாகியுள்ளதுடன் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.
குரோஸியாவை தாக்கிய பூகம்பம் 6.4 என பதிவாகியுள்ளது அதேவேளை, பல வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. பெட்ரின்ஜா என்ற நகரத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரின்ஜா மற்றும் சிசாக் நகரில் பலர் காயமடைந்துள்ளனர் என அவசரசேவை பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பலர் எலும்புமுறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்திரசிகிச்சைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறுமி கொல்லப்பட்டுள்ளது குறித்த தகவல் கிடைத்துள்ளது.இதனை தவிர உயிரிழப்புகள் குறித்த வேறு தகவல்கள் இல்லை என குரோஸியாவின் பிரதமர் அட்ரெஜ் பிளென்கொவிக் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு நகர்த்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.