அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் ஆட்சிமாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் ஆட்சி மாற்றத்திற்கு அவசியமான தகவல்களை தனக்கு வழங்க மறுக்கின்றது என பைடன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைமைத்துவத்திடமிருந்து தனது குழுவினர் தடைகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என பைடன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு திணைக்களமும் வரவு-செலவு திட்டம் மற்றும் முகாமைத்துவ அலுவலகமும் தடைகளை விதிக்கின்றன எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது எங்களிற்கு டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்த தகவல்களும கிடைப்பதில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை இது பொறுப்புணர்வற்ற நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.