January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவுதி அரேபியாவின் பெண் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

சவுதி அரேபியாவின் நன்கறியப்பட்ட பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் லுஜைன் அல் ஹத்துலுவுக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் ஐந்து வருடங்கள் எட்டுமாத சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

2018 முதல் சிறையிலிருக்கும் பெண் லுஜைனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அரசியல் முறையை மாற்றியமைக்க முயன்றார், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என சவுதிஅரேபிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓ ட்டுவதற்கான உரிமை உட்பட பல விடயங்களிற்காக குரல் கொடுத்த லுஜைன் அல் ஹத்துலு மிகமோசமான மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.சவுதி அரேபியா இதனை நிராகரித்துள்ளது.

பெண் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு எதிரான தீர்ப்பு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழும் தருணத்தில் வெளியாகியுள்ளது சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசரிற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

ஜோபைடன் சவுதிஅரேபியாவை மனித உரிமை விவகாரங்களில் கடுமையாக சாடிவந்துள்ளார்.