February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவுஸ்திரேலியாவில் 2021 ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விநியோகம் பூர்த்தியாகும்’

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என எதிர்பார்க்கின்றதாகவும், அவுஸ்திரேலிய மக்கள் பெருமளவில் தடுப்பு மருந்தினை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பைசர்- பயோன்டெக்கின் தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 2021 மார்ச் மாதமளவில் ஆரம்பமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.