Photo: Facebook/ Donald J. Trump
கொவிட் – 19 நிவாரண சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொவிட் நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது.
கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு நன்மைகளை குறித்த சட்டமூலம் விரிவுபடுத்துகிறது.
இந்த சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட முதலில் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த சட்டமூலம் மிகவும் முக்கியமானது எனவும், இதில் டிரம்ப் உடனடியாக கையெழுத்திடவேண்டுமென ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதில் கையெழுத்திட்டுள்ளார்.