கொவிட் 19 சட்டமூலத்தில் கைச்சாத்திட மறுத்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.
மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அவசியமான ஆதரவை வழங்கக்கூடிய 892 பில்லியன் டொலர் நிதியுதவி மற்றும் நிவாரண சட்டமூலத்தில் டிரம்ப் ஆதரவளிக்கவேண்டும் என பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது பொறுப்பை கைவிட்டுள்ளார். இதன் விளைவுகள் மிகமோசமாகயிருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் ஏகோபித்த இருதரப்பு ஆதரவுடன் ஆதரவளித்த சட்டமூலத்தில் டிரம்ப் கைச்சாத்திட மறுத்துள்ளதன் காரணமாக மில்லியன் கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லமுடியுமா என தெரியாத நிலையில் உள்ளனர் என பைடன் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் முக்கியமான சட்டமூலம். உடனடியாக டிரம்ப் இதில் கைச்சாத்திடவேண்டும் என பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வருடாந்தம் 75,000 அமெரிக்க டொலர்களிற்கு குறைவாக உழைக்கும் அமெரிக்கர்களிற்கு 600 டொலர் நிதியுதவியை வழங்கும் வேலைவாய்ப்பற்றவர்களிற்கு உதவிகளை வழங்கும் குறிப்பிட்ட சட்ட மூலம் குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதன் மூலம் டிரம்ப் ஜனநாயக கட்சியினரையும் குடியரசுக்கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
டிரம்ப் இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடாவிட்டால் 14 மில்லியன் மக்கள் மேலதிக நன்மைகளை இழக்கும் ஆபத்து காணப்படுகின்றது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.