அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு தற்கொலை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலையில் கேளிக்கை வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த வாகனம் வெடிபொருள்களால் நிரப்பப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரும் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காரில் வெடித்துச்சிதறிய பகுதியில் மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான பல முக்கிய குறிப்புகளைக் கைப்பற்றியதையடுத்து, முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவரது வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை சந்தேக நபர் குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என்பதை உறுதி செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றதாகவும் சிபிஎஸ் தெரிவித்துள்ளது.