துனிசியா கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாக துனிசிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்த பின்னர் 30 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இவர்களில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
37 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வேளை படகின் மோசமான நிலை மற்றும் சுமை காரணமாக படகு கவிழ்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோர்கி என்ற நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் படகில் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 13 பேரை தேடிவருவதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்களை கடத்திச்செல்லும் பல படகுகளை சமீப நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் துனிசிய அதிகாரிகள் எனினும் ஆள்கடத்தலில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
லிபியாவிலிருந்தும் துனிசிய கடற்பரப்பிலிருந்தும் குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு பல படகுகள் புறப்படுகின்றன.
வறுமை மக்கள் இவ்வாறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.